பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் அதிரடி; WHO இல் இருந்து வெளியேற்றம்!
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும்
இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் மற்றும் அதன் பணிக்கான அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்தும் என கூறப்படுகின்றது.
WHO இன் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக அமெரிக்கா உள்ளது, அதன் மொத்த நிதியில் 18% ஆகும்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் செயல்முறையைத் தொடங்கினார், பின்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், தனது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே அந்த முடிவை இரத்து செய்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் WHO இல் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.