பிப்ரவரி 1ஆம் திகதி முதல்... கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் 25 சதவிகித வரி அமுல்
தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலான ஆவணங்களில் கையெழுத்திட இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.
சமூக ஊடகம் ஒன்றில் ட்ரம்ப் வெளியிட்ட செய்தி ஒன்றில், ஜனவரி மாதம் 20ஆம் திகதி, தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், தான் கையெழுத்திட இருக்கும் முதல் ஆவணங்களில் ஒன்று கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலானதாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
ட்ரம்ப் நேற்று பதவியேற்றதுமே புலம்பெயர்தலுக்கெதிரான நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்.
இதற்கிடையில், அவர் ஏற்கனவே எச்சரிந்திருந்தபடி கனடா மீது 25 சதவிகித வரிகள் எப்போது விதிப்பார் என்பது குறித்து அறிய உலகமே ஆர்வமாக உள்ளது.
இந்நிலையில், தான் ஏற்கனவே கூறியபடி, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிப்பு அமுல்படுத்தப்படலாம் என மீண்டும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
அந்த வரி விதிப்பு பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரலாம் என ட்ரம்ப் தற்போது தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நாடுகளும், போதைப்பொருட்களையும், எல்லை தாண்டி சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரையும் கட்டுப்படுத்தும்வரை இந்த வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.