ஜப்பானில் பாலியல் சேவைகளை பெறும் ஆண்களுக்குத் தண்டனை
ஜப்பானில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடமிருந்து பாலியல் சேவைகளை பெறும் ஆண்களுக்குத் தண்டனை வழங்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது அந்தநாட்டின் பாலியல் அணுகுமுறையில் ஒரு பெரிய கொள்கை மாற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், ஜப்பான் பாலியல் சுற்றுலா மையமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் பாலியல் சுற்றுலா மையமாக மாறும் அபாயம்
கடந்த வாரத்திலிருந்து ஜப்பானில் இந்தப் பிரச்சினை ஒரு பரபரப்பான விடயமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற பாதீட்டுக் குழு அமர்வில், ஃபுகோக்காவின் ஒன்பதாம் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரின்டாரோ ஒகட்டா, பிரதமர் சனாய் டகாயிச்சியிடம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில் தற்போதைய சட்டம் பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் மிகக் குறைவான பங்கு வகிக்கிறது என வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.