மற்றுமொரு நகரும் வீழ்ந்தது; போர் தொடங்கியதாக வாக்னர் குழு அதிகார பூர்வ அறிவிப்பு
மொஸ்கோவிற்கும் ரொஸ்டொவ் ஒன் டொன் நகரிற்கும் இடையில் உள்ள வொரோனெஸ் நகரையும் வாக்னர் கூலிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாக்னர் கூலிப்படையினர் உள்நாட்டுப்போர் தொடங்கியதாக அதிகார பூர்வமாக டெலிகிராமில் அறிவித்துள்ளது.
ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்
இந்நிலையில் வாக்னர் கூலிப்படைகளின் முன்னேற்த்தை தடுப்பதற்காக அந்த நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு குதமொன்றின் மீது ரஸ்ய ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இதன்காரணமாக அந்த எண்ணெய் சேமிப்பு குதத்தில் பெரும்தீ மூண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
More footage of the bombing of Voronezh oil depot. The Russian regime army eventually terrorizes its last victim: The Russian population.
— (((Tendar))) (@Tendar) June 24, 2023
I have been warning that this will end exactly this way. The final terror.#Russia #coup #Voronezh pic.twitter.com/5qvVdsRSYL
ரஷ்யாவின் அலிகேட்டர் என அழைக்கப்படும் காமோவ் கா ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொள்வதை காண்பிக்கும் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதேவேளை உக்ரைன் போரில் ரஷ்ய படைக்கு ஆதரவாக நின்ற வாக்னர் கூலிப்படையினர் தற்போது ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலத்தில் ஈடுபட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலை; அரசாங்கத்திற்கு எதிராக கலகம்!
ரஷியாவில் ஆட்டம் காட்டும் கூலிப்படை ;தலைவர் மீது குற்றவியல் வழக்கு!
கூலிப்படையினரிடம் வீழ்ந்தது ரஸ்யாவின் தென்பகுதி நகரம்!
மொஸ்கோ நோக்கி வாக்னர் கூலிப்படை; பிரிட்டன் எச்சரிக்கை!