சக்கர நாற்காலியில் வாழும் குழந்தைகளுக்கு ஆடை வடிவமைத்த மெக்சிகோ!
மெக்சிகோவில் Cerebral Palsy எனும் பெருமூளை வாதம் உள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு இயந்திர ஆடை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெருமூளை வாதத்தால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பலர் சக்கர நாற்காலியின் உதவியுடன் நகர்கின்றனர்.
Atlas 2030 இயந்திர ஆடையின் உதவியுடன், அத்தகைய சிறுவர்கள் சிலரால் நிற்கவும் நடக்கவும் முடிகிறது. மெக்சிகோ சிட்டியிலுள்ள சிகிச்சை நிலையத்தில் அந்த இயந்திர ஆடை சிலருக்கு வழங்கப்படுகிறது.
ஸ்பானியப் பேராசிரியர் இலேனா கார்சியா ஆர்மாடா (Elena Garcia Armada) அந்தச் சிறப்பு இயந்திர ஆடையை வடிவமைத்தார்.
மின்கலன்களுடன் செயல்படும் அந்த ஆடை, அதை அணியும் பிள்ளைகளின் உடலுக்கேற்ப நுணுக்கமாகச் செயல்படக்கூடியது.
இதன்படி பெருமூளை வாதத்தால், நடக்கும் ஆற்றலை இழந்திருக்கும் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை அளித்து அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த Atlas 2030 உதவுகிறது.