6000 ஊழியர்களை கொத்தாக வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்!
ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறியது.
பணிநீக்கம்
இதனால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் உறுதியாக கூறவில்லை. இந்த நிலையில், அமெரிக்க ஊடகத்தின் அறிக்கையின் படி, சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர். மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு வணிகங்களில் வலுவான செயல்திறன் காரணமாக அந்நிறுவனம் வலுவாக உள்ளது.
இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது. 2022 ஆம் ஆண்டு ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழில்நுட்பத்துறை பெரும் பாதிப்படைந்தது.
ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரட்டிப்பாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது.