கனடா எல்லைப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு
கனடாவின் மத்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு சட்டமூலம் சீ-12, குடியேற்றக்காரர்களின் உரிமைகளை மீறும் அபாயம் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் பல குடியேற்ற உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

குடியேறிகள் உரிமைக்ள வலையமைப்பு, கனடிய அகதிகள் பேரவை உள்ளிட்ட பல அமைப்புகள், இந்த சட்ட மூலத்தை விமர்சனம் செய்துள்ளன.
இந்த சட்ட மூலத்தை ஆய்வு செய்யும் குழுக்களில் சாட்சிகளாக சேர்க்கப்படாததால், இந்த அமைப்புக்கள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்த சீ-12 சட்ட மூலம் ஒன்பது சட்டங்களின் திருத்தங்களை கொண்டுள்ளது எனவும் 70 பக்கங்கள் உள்ளதாகவும் இதனை மூன்று வாரங்களில் ஆய்வு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.