துபாய்–இந்தியா நோக்கி பிரிட்டன் செல்வந்தர்கள் இடம்பெயர்வு
பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர் தொடர்ந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழிலதிபர்களும், திறமையான வல்லுநர்களும் பிரித்தானியாவை விட்டு துபாய் அல்லது இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் பாதீட்டில் வரிகள் தொடர்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக பல தொழிலதிபர்களுக்கு செலவுகள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டுக்கான பாதீட்டுக்குத் தயாராகும் நிலையில், பிரித்தானியா தனது வரிக்கொள்கைகள் குறித்து கவனமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.
பாதீட்டில் மேலும் வரிகள் விதிக்கப்படலாம் என்பதால் செல்வந்தர்கள் பிரித்தானியாவை விட்டு வேறு நாடுகளுக்கோ அல்லது தங்கள் சொந்த நாட்டுக்கோ திரும்பத் திட்டமிட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.