நிலக்கரி சுரங்க விபத்து... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: வெளிவரும் புதிய தகவல்
துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் பலி எண்ணிக்கை 41 என அதிகரித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் துருக்கி எரிபொருள் அமைச்சர் ஃபாத்தியா டான்மெஸ் தெரிவிக்கையில், வடக்கில் ஒரு சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 350 மீற்றர் தூரத்திற்கு பெரும் வெடிப்பு கிளம்பியது.
தீ விபத்தைத் தொடர்ந்து தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து திரளாக வெளியேற முயன்றனர். இந்த தீ விபத்தில் தற்போது 41 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுரங்கத்திற்கு வெளியே தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் காத்திரும் காட்சிகள் துருக்கி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
துருக்கியில் 2014 ஆம் ஆண்டு, நடந்த தீ விபத்தில் 301 தொழிலாளர்கள் மரணமடைந்த சம்பவம், இதுவரையான விபத்துகளில் மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது.