மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ பட்டம் வென்ற இந்திய அமெரிக்க மருத்துவ மாணவி!
2023ம் ஆண்டுக்கான 'மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ.,' அழகி பட்டத்தை இந்திய அமெரிக்க மருத்துவ மாணவி ரிஜூல் மையினி கைப்பற்றினார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ., மிஸஸ் இந்தியா யு.எஸ்.ஏ. மற்றும் மிஸ் டீன் இந்தியா யு.எஸ்.ஏ., ஆகிய மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
25 மாநிலங்களைச் சேர்ந்த 57 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு மிஸ் இந்தியா யுஎஸ்ஏ அழகி போட்டி 41வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இது இந்தியாவுக்கு வெளியே நீண்ட காலமாக நடைபெறும் இந்திய அழகி போட்டியாகும்.
இதில் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த இந்திய அமெரிக்க 24 வயது மருத்துவ மாணவியான ரிஜூல் மையினி 'மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. 2023 என்ற பட்டத்தை வென்றார்.
அதே போன்று மிஸ் டீன் இந்தியா யு.எஸ்.ஏ., பட்டத்தை பென்சில்வேனியாவைச் சேர்ந்த சலோனி ராம்மோகன் என்பவரும், மிஸஸ் இந்தியா யு.,எஸ்,ஏ, பட்டத்தை மேசிசூட்சஸ் மாகாணத்தைச் சேர்ந்த சினேகா நம்பியாரும் வென்றனர்.
மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ, பட்டம் வென்ற ரிஜூல் மையினி அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.