கிரிமியா தீபகற்பத்தில் உக்ரைனின் உக்கிர தாக்குதலில் திணறும் ரஷ்யா!
கிரிமியா தீபகற்பத்தில் உக்ரைன் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் அதிவேக படகு தாக்குதல்கள்காரணமாக இரண்டு கப்பல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உக்ரைனின் இந்த தாக்குதலில் செவஸ்டபோல் கப்பல்கட்டும் தளம் தீப்பிடித்து எரிகின்றது என ரஸ்யாதெரிவித்துள்ளது. பத்து ஏவுகணைதாக்குதல்களும் மூன்று அதிகவேக படகு தாக்குதல்களும் இடம்பெற்றன என ரஸ்யா தெரிவித்துள்ளது.
ஏழு ஏவுகணைகளும் மூன்று படகுகளும் அழிப்பு
ஏழு ஏவுகணைகளும் மூன்று படகுகளும் அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ள ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு, திருத்தப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் தீப்பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என செவஸ்டபோல் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிலிருந்து ரஸ்யா ஆக்கிரமித்த கிரிமியாவின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் கட்டும் தளமாக உள்ளதுடன் , ரஸ்யாவின் கருங்கடல் கப்பல் படையணியின் கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் பழுதுபார்ப்பதற்கு உதவுகின்றது.
உக்ரைனின் தாக்குதலில் துறைமுகத்தில்தீப்பிடித்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை யுத்தம் ஆரம்பமான பின்னர் இந்த துறைமுகத்தின்மீது உக்ரைன்மேற்கொண்ட குறிப்பிடத்தக்க தாக்குதல் இது என கூறப்படுகின்றது.