கனடாவில் காணாமல் போன மலையேறி சடலமாக மீட்பு
கனடாவின் கியுபெக் மாகாணத்தைச் சேர்ந்த 22 வயதான Leo DuFour என்பவர் கடந்த நவம்பர் மாதம் அடிரொன்டாக்ஸ் மலைத்தொடரில் சறுக்கிச்செல்லும்போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவரது சடலம் எலேன் மலைத் தொடர் Allen Mountain பாதையிலிருந்து வெளியேறிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையோர்க் சுறறாடல் பாதுகாப்பு திணைக்களத்தின் New York State Department of Environmental Conservation (DEC) செய்தித் தொடர்பாளர் ஜான் சால்கா உறுதிப்படுத்தினார்.
“Essex Countyயில் உள்ள Mt. Allen Mountain பாதையின் அருகிலிருந்து Leo DuFour என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Leo DuFour கடந்த நவம்பர் 29ஆம் திகதி தனியாக Allen Mountain-க்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
ஒரு வாரத்திற்குப் பிறகு, குறைந்த வெப்பநிலை மற்றும் கனமழை காரணமாக தேடல் பணிகள் மீட்பு நடவடிக்கையாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 10ம் திகதி, மலைப் பாதையில் பயணித்த ஒரு ஹைக்கிங் குழு ஒரு சடலத்தை கண்டுபிடித்ததாக தகவல் அளித்தது.
இதையடுத்து Forest Rangers, DEC மற்றும் New York State Police உடனடியாக செயல்பட்டு அந்த இடத்தில் இருந்து சடலத்தை மீட்டனர்.