கனடாவில் காணாமல் போன வயோதிபர்கள் சடலங்களாக மீட்பு
கனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த வயோதிபர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் இந்த தம்பதியினரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அல்பர்ட்டாவின் ரெட் டீர் பகுதியைச் சேர்ந்த, 63 வயதான பெவர்லி லாம்பெட் மற்றும் 80 வயதான ரிச்சர் வென்டர்புரோக் ஆகியோர் இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
இந்த இரண்டு முதியவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த இருவரும் கோர்னஸ்பாஸ்ட் பகுதியில் சடலங்காக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சடலங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், மரணங்கள் தொடர்பில் தற்போதைக்கு சந்தேகங்கள் எதுவும் கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.