மிஸ்ஸிசாகுவாவில் துப்பாக்கிச்சூடு: 14 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
மிஸ்ஸிசாகுவாவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் (02-02-2022) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலை 427 மற்றும் மார்னிங் ஸ்டார் டிரைவிற்கு அருகில் உள்ள டார்சல் அவென்யூ மற்றும் எட்யூட் டிரைவ் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
Someone found her shot and not breathing in this third floor stairwell. That’s a bullet hole in the wall. Police don’t know how she ended up getting shot but they’re investigating it as a homicide pic.twitter.com/UUf2oDLGm9
— Linda Ward (@LindaWardCBC) February 2, 2022
"இச்சம்பவம் ஒரு கொலையாக விசாரிக்கப்படுகிறது, இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் தெளிவாக தகவல்கள் தெரியவில்லை" என்று பீல் பொலிஸார் நேற்று புதன்கிழமை (03-01-2022) செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இரவு 9 மணியளவில் 911 அழைத்த நபர் ஒருவர் சிறுமி மூச்சுவிடாமல் இருப்பதாக தெரிவித்ததாக பீல் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.