மிஸ்ஸிசாகுவாவில் மூடப்பட்ட இரவு கேளிக்கை விடுதி
வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதன் காரணமாக மிஸ்ஸிசாகுவாவில் இரவு கேளிக்கை விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் இந்த இரவு கேளிக்கை விடுதியை மையப்படுத்தி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 4ம் திகதி கேளிக்கை விடுதிக்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி வன்முறைகள் இடம்பெறுவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என நகர மேயர் பொனி க்ரோம்பி தெரிவித்துள்ளார்.
நகர மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக சகல அதிகாரங்களையும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆயுத மற்றும் கோஷ்டி வன்முறைகளுக்காக களமாக நகரத்தை மாற்றிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிஸ்ஸிசாகுவாவில் அமைந்துள்ள ஹெர்(Her) என்ற இரவு நேர கேளிக்கை விடுதி இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு தற்காலிக அடிப்படையில் மூடப்படுகின்றது.