இணைய வழி துன்புறுத்தல் தடைச் சட்டத்தை அமல்படுத்துமாறு கோரிக்கை
இணைய வழி துன்புறுத்தல் தடைச் சட்டத்தை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான தாய்மார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இணைய வழியில் தங்களது பிள்ளைகள் துஷ்பியோகத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த புதிய சட்டத்தை அமல்படுத்துவது அத்தியாவசியமானது என தெரிவித்துள்ளனர். பில் சீ-63 என்ற இந்த உத்தேச சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் பிரசூரமாவதை தடுப்பதற்கு இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் ஏற்கனவே கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் வாசிப்பு நிலையில் இன்னமும் காணப்படுகின்றது.
இணையவழியில் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இந்த சட்டம் வழியமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் இணைய வழி பாலியல் துஷ்பியோக சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 23 வீதம் கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் பாலியல் ரீதியான கப்பம் கோரல் சம்பவங்கள் எண்ணிக்கை 6000மாக பதிவாகியுள்ளது.