கனடாவின் பிரதான நகரில் குடியிருப்பு விலை வரலாறு காணாத வீழ்ச்சி
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் குடியிருப்பு விலை 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் வரலாறு காணாத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான மாண்ட்ரீல் பகுதியில் அக்டோபர் மாதம் மட்டும் 1,501 குடியிருப்புகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 35% சரிவை சந்தித்துள்ளது எனவும்,
அத்துடன் ஒற்றை குடும்பத்தினருக்கான குடியிருப்பானது கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
இதற்கு முதன்மை காரணமாக வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு என குறிப்பிட்டுள்ள சந்தை மதிப்பிட்டாளர்கள் தரப்பு, இவை இரண்டுமே வாங்கும் சக்தியை முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
மக்கள் மற்றும் முதலீட்டாளர்களை பொறுத்தமட்டில் சந்தை உறுதியான நிலைக்கு திரும்பவும் நிலைமைகள் மிகவும் சாதகமாக மாறவும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு ஒற்றை குடும்ப வீட்டின் சராசரி விலை $510,000 ஐ எட்டியது, இது முந்தைய ஆண்டை விட ஒரு சதவீதம் வீழ்ச்சியாகும்,
அதே சமயம் காண்டோவின் சராசரி விலை $380,000 ஐ எட்டியது மற்றும் கடந்த ஆண்டை விட ஒப்பீட்டளவில் மாறாமல் உள்ளது என தெரியவந்துள்ளது. டூப்ளக்ஸ் மற்றும் ட்ரிப்லெக்ஸ் குடியிருப்புகளின் சராசரி விலை $700,000 ஆக இருந்தது, இது அக்டோபர் 2021ல் இருந்து $10,000 சரிவு அல்லது 1.4 சதவீதம் குறைவு என கூறப்படுகிறது.