மாண்ட்ரியலில் அதிவேகமாக வாகனம் செலுத்திய இளைஞருக்கு அபராதம்
கனடாவின் மாண்ட்ரியலில் 24 வயதான இளைஞர் ஒருவர் அதிவேகமாக வாகனம் செலுத்தியமைக்காக பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு 2,860 கனடிய டொலர்அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க்யூபெக் மாகாண காவல்துறையினர் பொருத்தியிருந்த வேகக் கேமராக்களின் மூலம் குறித்த நபரின் குற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில், 196 கி.மீ வேகத்தில் செலுத்திய வாகனமொன்று எடோராட் மொன்ட்பெடிட் வீதியில் பயணம் செய்துள்ளது.
அங்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் வெறும் 70 கி.மீ என்பதால், இது மிகப்பெரிய மீறலாக கருதப்பட்டது.
வாகனத்தை ஓட்டிய இளைஞர் தனது ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காததால், அதற்கும் 520 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் மொத்த அபராத தொகை 2,860 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அவரது வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஓட்டுநர் உரிமை 7 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது.
வேகக்கட்டுப்பாட்டை மீறுவது விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகவே உள்ளது என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீதி விபத்துக்களில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.