கனடாவில் இடம்பெற்ற கொடூர கத்தி குத்துச் சம்பவம்
கனடாவில் கொடூரமாக கத்தி குத்து தாக்குதல் சம்பவமொன்றில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் மொன்றியல் ரொஸ்மோன்ட் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டிடமொன்றிற்குள் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாரியளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மொன்றியல் மேயர் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளர்ர்.
கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.