மொண்ட்ரியாலில் இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக வீட்டிற்குத் தீவைப்பு
கனடாவின் மொண்ட்ரியால் நார்த் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகத் தீ வைக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல் துறை தெரிவித்துள்ளது.
எபர்ட் அவென்யூ மற்றும் கூவின் பவுலேவார்ட் சந்திப்பில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை 4 மணி அளவில் தீப்பற்றியதாகக் காவல் துறைக்கு 911 அவசர அழைப்பு வந்தது.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, மொண்ட்ரியால் தீயணைப்புத் துறையினர் ஏற்கனவே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருந்தனர் முதற்கட்ட விசாரணைகளின்படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் அந்த வீட்டின் முன் கதவுக்குத் தீ வைத்துவிட்டு, காவல்துறையினர் வருவதற்கு முன்பே தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் தீப்பற்றவைக்கப் பயன்படும் பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை.
வீட்டிற்கு ஏற்பட்ட சேதமும் மிகக் குறைவே ஆகும். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை. இந்த வழக்குத் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக, மொண்ட்ரியால் காவல் துறையின் தீவைப்புச் சம்பவங்கள் தடுப்புப் பிரிவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.