கனடாவில் வெப்ப அலை தாக்கத்தினால் மரணங்கள் பதிவு
கனடாவின் மொன்றியலில் வெப்ப அலை தாக்கத்தினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மொன்றியலின் நகரின் பொது சுகாதாரத் துறையினர் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெப்பநிலை உயர்ந்தபோது மேலும் ஐந்து வெப்பம் தொடர்பான மரணங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இதுவரையில் ஒரே ஒரு மரணம் மட்டுமே பதிவாகியிருப்பது ஆச்சரியமளிப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் படிப்படியாக தீவிர வெப்பத்திற்கு பழகியிருக்கலாம் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொன்றியலில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் வெப்பநிலை 33 பாகை செல்சியஸை கடந்தது.
நேற்றைய தினம் உயர் வெப்பநிலை 34 பாகை செல்சியஸை எட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு மொன்றியலில் வெப்பம் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகியிருக்கபதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர வெப்ப காலங்களில், சுவாச நோய்கள், இதய நிலைகள், நீரிழிவு மற்றும் மனநல பிரச்சனைகளுக்காக மருத்துவமனை அனுமதி விகிதங்கள் உயர்வடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.