மொன்றியலில் ஐந்து மாணவிகளை தகாத முறையில் நடத்திய ஆசிரியர்
மொன்றியலில் ஐந்து பாடசாலை மாணவிகளை தகாத முறையில் நடத்திய ஆசிரியர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மொன்றியலின் ஆரம்ப பாடசாலையொன்றின் ஆசிரியரே இவ்வாறு குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார்.
டொமினிக் ப்லான்சட்டே என்ற 28 வயதான பாடசாலை ஆசிரியர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இரண்டு பாடசாலைகளில் குறித்த நபர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், சிறுவர் ஆபாச காணொளிகளை வைத்திருந்தார் எனவும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.