உலக அரங்கில் சாதனை படைத்த மொன்றியல் இளைஞன்
கனடாவின் மொன்றியல் இளைஞர், உலக இளையோர் செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
18 வயதான ஸ்வான் ரொட்ரிகோ லிமியுக்ஸ் (Shawn Rodrigue-Lemieux )என்ற இளைஞர் இவ்வாறு உலக இளையோர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கியூபெக் மாகாணத்தினைச் சேர்ந்த ஒருவர் முதல் தடவையாக இந்த பட்டத்தை வென்றுள்ளார் என்பதுடன், இந்த பட்டம் வென்ற இரண்டாவது கனேடியர் என்பது குறிப்பிடத்தக்கது.
18 வயதுக்கும் கீழ்பட்ட உலக செஸ் சாம்பியன்சிப் போட்டித் தொடரில் 54 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி லிமியுக்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரோமானியாவில் இந்த போட்டித் தொடர் நடைபெற்றது. சாம்பியன் பட்டம் வென்றெடுக்கும் எண்ணத்தில் போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை எனவும் வெற்றிகள் குவியும் போது நம்பிக்கை ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு வெற்றிகளின் மூலம் கிரான்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றெடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மிக இளவயதில் கிரான்ட் மாஸ்டர் பட்டம் வென்ற கியூபெக் பிரஜை என்னும் பெருமையை லிமியுக்ஸ் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.