கனடாவில், இரண்டு வயது குழந்தையின் பெற்றோரது உருக்கமான கோரிக்கை
கனடாவின் மொன்றியல் வேஸ்ட் ஐலண்ட்டில் வசிக்கும் ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி, அவர்களின் இரண்டரை வயது மகளாகிய கர்மெல்லாவுக்காக ஒரு வாழும் சிறுநீரக தானதாரரை தேடி வருகின்றனர்.
இது, அந்தச் சிறுமியின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய ஒன்று என்பதாகவும், அவளுக்கு இது உயிர் காக்கும் தேவையாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கர்மெல்லாவுக்கு பிறவியிலேயே "காங்ஜெனிடல் நெப்ராட்டிக் சிண்ட்ரோம்" (congenital nephrotic syndrome) எனப்படும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒரு நோய் கண்டறியப்பட்டது. ந்த நோயால், சிறுமியின் சிறுநீரில் அதிகளவான புரதம் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விளைவாக, அவளுக்குச் சீராக வளர முடியவில்லை. மேலும், அவளது நோயெதிர்ப்பு சக்தியும் மிகவும் குறைந்தது,” என அவரது தந்தை ஜஸ்டின் தெரிவித்தார்.
கர்மெல்லா பிறந்த சில வாரங்களுக்குள் உடல் வீக்கம், எடை அதிகரிக்காத நிலை போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக ஜஸ்டின் கூறினார்.
அவள் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபின் தான் நோயறிதல் உறுதியாகி, பெற்றோர் தற்போது அந்த நிலையை கையாள கற்றுக் கொள்கின்றனர்.
இரண்டரை வயதான கர்மெல்லா தற்போது வெறும் 8.2 கிலோ கிராம் எடையுடன் மட்டுமே இருக்கிறாள்.
நடக்க முடியாத நிலையில் இருப்பதுடன், உணவுக் குழாயின் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது. அவளுக்குத் தேவையான மருந்து கொடுப்பது, மற்றும் அவளுக்கேற்ப கலோரி அளவை நிரந்தரமாக சீராகச் சாப்பிடச் செய்வது என்பது ஒரு முழுநேர வேலை என ஜஸ்டின் கூறுகிறார்.
எனவே தனது பிள்ளைகளுக்கு சிறுநீரகமொன்றை தானமாக வழங்க உதவுமாறு சிறுமியின் பெற்றோர் உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்னர்.