கனடியர்களின் வேலை தொடர்பில் வெளியான ஆய்வு முடிவுகள்
கனடியர்கள் அதிக அளவில் வீட்டில் இருந்து வேலை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில், உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உலகின் ஏனைய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை விட கனடியர்கள், அதிகமாக வீட்டிலிருந்து வேலை செய்வதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டான்போர்ட் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, கனடியர்கள் வாரத்திற்கு சராசரியாக 1.9 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வில் 40 நாடுகளில் இருந்து 16,000 பேர் பங்கேற்றனர், ஆனால் இதில் கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்டதாரிகள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
இதனால், அனைத்து வேலைக்கு வரும் மக்களின் நிலையை இதனுடன் ஒப்பிட முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பட்டதாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்" என்பதாலே இவ்வாறு தெரிவுசெய்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகளாவிய தரவரிசையில், கனடாவுக்கு பின்னர் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக ஃபின்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகியன இடம்பெற்றுள்ளன.