கன்சர்வடிவ் தலைவர் பியர் பொலியேவ் தோல்வியை ஒப்புக்கொண்டார்
பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிப் பெற்றதை ஒப்புக்கொள்வதாக கன்சர்வடிவ் தலைவர் பியர் பொலியேவ் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னியை அவரது வெற்றிக்கு வாழ்த்தினார். அதேசமயம், தனது கட்சியின் சாதனைகள் பற்றியும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
"என் சக கன்சர்வடி கட்சியினரே, நம்மிடம் இன்று கொண்டாட பல விடயங்கள் உள்ளது,.இன்று நாமே 20 இடங்களை அதிகம் பெற்றுள்ளோம். 1988க்குப் பிறகு, நமது கட்சி பெற்றுள்ள மிக உயர்ந்த வாக்குப் பங்காக இது அமைந்துள்ளது," என பொலியேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், "என்.டி.பி மற்றும் லிபரல்களுக்கு கூட்டணி அரசு அமைக்க தேவையான இடங்களை நாம் தடுக்க முடிந்தது," எனவும் கூறியுள்ளார்.
மாற்றம் கடினமானது; ஆனால் அதை சாதிக்க சற்றே நேரம் தேவைப்படுகிறது," என உறுதியளித்தார்.
அதேசமயம், தன்னுடைய தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் அவர் வெளிப்படுத்தவில்லை.