அமெரிக்க மாகாணங்களில் தீவிரமாகும் Omicron: நெருக்கடியில் மருத்துவமனைகள்
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் Omicron தொற்று தீவிரமடைந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள Omicron தொற்று, தற்போது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருவதுடன், முன்னேறிய நாடுகள் பல கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க மாகாணங்கள் பல புதிய Omicron தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. நியூயார்க்கில் ஏற்கனவே மூவருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 8 என அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, Omicron தொற்று பரவியுள்ள மாகாணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது. மாசசூசெட்ஸ், கனெக்டிகட் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் சனிக்கிழமை முதல் பாதிப்புகளை அறிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தகவலில், நியூ ஜெர்சி, ஜார்ஜியா, பென்சில்வேனியா மற்றும் மேரிலாந்து ஆகிய பகுதிகளில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்துள்ளன.
மட்டுமின்றி மிசோரி பகுதியில் வெள்ளிக்கிழமை ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நெப்ராஸ்கா, மினசோட்டா, கலிபோர்னியா, ஹவாய், கொலராடோ மற்றும் உட்டாவிலும் கொரோனா பெருந்தொற்றின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மாகாணங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த 30 நாட்களில் இரட்டிப்பானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் மருத்துவமனைகளை நாடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும், பல மருத்துவமனைகள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.