டொராண்டோவை விட்டு வெளியேறும் குடும்பங்கள்
கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் இருந்து கடந்த ஆண்டு 35,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளன.
இந்த குடும்பங்கள் கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிப்பெயர்ந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை டொராண்டோ பெரும்பாக பகுதியில் இருந்து மொத்தம் 2.5 லட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்திருந்தனர்.

எனினும் அதிகமானவர்கள் டொராண்டோ பெரும்பாக பகுதியின் வேறு பகுதிகளுக்கே குடிபெயர்ந்துள்ளனர்.
ஆனால், 68,173 குடும்பங்களில் 51.5% (35,140) முழுமையாக டொராண்டோவை விட்டு வெளியேறியுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நகரங்களை விட்டு கிராமிய பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வீட்டு விலை உயர்வு காரணமாக மக்கள் டொராண்டோ பெரும்பாக பகுதியை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய ஆண்டுகளாகவே மக்கள் டொராண்டோவை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.