மொராக்கோ உதைபந்து அணியின் சாதனை
மொராக்கோ ஒரு மகத்தான சாதனை படைத்ததுள்ளது. ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளில் முதன் முதலில் உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்ற நாடாக வெற்றி கண்டுள்ளது.
மொராக்கோ அணியின் வெற்றியானது இன்னொரு வகையில் ஐரோப்பியாவின் வெற்றிதான். அதிகமான மொராக்கோ வீரர்கள் ஐரோப்பிய மண்ணில் பிறந்து அங்கேயே கால்பந்து பயின்று மொராக்கோ அணியில் இணைந்து கொண்டவர்களே.
கீப்பர் நட்சத்திர ஆட்டக்காரர்கள் அனைவரும் மொராக்கோவுக்கு வெளியே Non Resident Moroccan ஆக பிறந்தவர்கள்.
- Yassine Bounou - கனடா
- Munir Mohamedi - ஸ்பெயின்
- Achraf Hakimi - ஸ்பெயின்
- Noussair Mazraoui - நெதர்லாந்து
- Roman Saiss -பிரான்ஸ்
- Sofyan Amrabat -நெதர்லாந்து
- Illias Chair-பெல்ஜியம்
- Selim Amallah-பெல்ஜியம்
- Bilal El Khannous -பெல்ஜியம்
- Hakim Ziyech-நெதர்லாந்து
- Anass Zaroury-பெல்ஜியம்
- Zakaria Aboukhal-நெதர்லாந்து
- Sofiane Boufal-பிரான்ஸ்
- Walid Cheddira -இத்தாலி
ஏனைய நாடுகளுக்கு பாடம் இருக்கிறது என்பது திறமை எங்கே இருந்தாலும் அதை வரவேற்று அதை தேசத்தின் வெற்றிக்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாட்டில் வாழ முடியாது புலம் பெயர்ந்து வாழும் மக்களை வில்லனாக பார்க்க கூடாது. ஏனைய தேசங்களில் புலம் பெயர்ந்து வாழுவோர் முதலீட்டின் தோற்றுவாய், திறமைகளின் தோற்றுவாய், தேச வளர்ச்சியின் பாரிய பங்காளர்கள். மாறாக இங்கே Non Resident Sri Lanka அரசியல் ரீதியாக மலடாக்கும் சட்டமூலத்தை வெட்கமில்லாமல் நிறைவேற்றுகிறார்கள், அவர்கள் முதலீடு செய்ய தடை போடுகிறார்கள்.
இலங்கை உலகம் முழுவதும் சென்று பிச்சை எடுக்க தேவையில்லை. புலம்பெயர் சமூகத்தின் அரசியல் உரிமைகள் சொத்து உரிமைகள் பொருளாதார உரிமைகள் கொடுத்து அனைவருக்கும் இரட்டை பிரஜாவுரிமை கொடுத்தாலே தீர்ந்து விடும்.
ஆனால் இனவாதம் இதற்கு அனுமதியாது.ஆனால் அரசியல் வாதிகள் களவெடுத்த முழுக் காசும் இயக்கங்கள் சேர்த்த முழுக் காசும் அங்கே உள்ள பினாமிகளுக்கே அனுப்பி முதலிடுகிறார்கள். பச்சை விளாங்காய்களா மொராக்கோவை பார்த்தாவது திருந்துங்கடா