வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான மினி பஸ் : 24 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் இடம்பெற்ற விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
மொராக்கோவில் உள்ள பல ஏழை குடிமக்கள் கிராமப்புறங்களில் பயணம் செய்ய மினி பஸ்களைப் பயன்படுத்துகின்றனர்.
மொராக்கோவில் ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை உயிரிழப்புகள் மற்றும் 12,000 காயங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
தேசிய சாலை பாதுகாப்பு அமைப்பின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 10 உயிரிழப்புக்கள் பதிவாகின்றதாக குறிப்படப்படுகின்றன.