கனடாவில் இன்று அமுலுக்கு வரும் நேர மாற்றம்
கனடாவின் அநேகமான பகுதிகளில் இன்றைய தினம் நேர மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
பகல்நேர சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்பட உள்ளது. கனடாவில் நேர மாற்றம் தொடர்பில் சில பிராந்தியங்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்றது.
சில இடங்களில் இந்த நேர மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் இவ்வாறு நேர மாற்றம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சஸ்கட்ச்வானில் கடந்த நூறு ஆண்டுகளாக நேர மாற்றம் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோவிலும் நிரந்தரமான நேரத்தை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் இன்றைய நேர மாற்றத்தின் ஊடாக மேதிகமாக ஒரு மணித்தியாலம் உறங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.