இரண்டரை மாத குழந்தையை கிணற்றில் வீசிய தாய் ; பொலிஸார் தீவிர விசாரணை
காலி எல்பிட்டிய - கஹதுவ, துடுவேகொட பகுதியில் தனது இரண்டரை மாதமேயான பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பின்னர், குறித்த பெண் "நான் மகளை கிணற்றில் போட்டுவிட்டேன்" என சத்தமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, அவரது கணவர் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி, அதில் மிதந்துகொண்டிருந்த குழந்தையை மீட்டுள்ளார்.

பின்னர், அயலவர்களின் உதவியுடன் குழந்தை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விரைவாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழமற்றதாக இருந்தமையும் உயிர் காப்பாற்றப்பட்டதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.