எட்மான்டனில் மோட்டார் சைக்கிள் கும்பல் கைது
கனடாவின் ஒன்றாரியோவின் எட்மான்டனில் மோட்டார் சைக்கிள் கும்பலொன்றை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒன்றாண்டு காலணமாக மேற்கொள்ளப்பட்ட நீடித்த விசாரணைக்குப் பின்னர் இந்தக் கும்பலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வன் ஓடர் மோட்டார் சைக்கிள் கிளப் என்ற இந்த கும்பலை முற்றிலும் கலைத்து, அதன் பல உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை 2024 அக்டோபரில் RCMP உடன் இணைந்து தொடங்கப்பட்டது.
விசாரணையில், குறித்த கும்பல் மீது துப்பாக்கி கடத்தல், துப்பாக்கி கடத்த சதி, மிரட்டல், கொள்ளை, தாக்குதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் பங்கு ஆகிய பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் கும்பலுக்கு பீல், டொரான்டோ மற்றும் ஹாலிஃபாக்ஸ் பகுதிகளில் கிளைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கும்பல் தொடர்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எட்மன்டன், ஷெர்வுட் பார்க், ஆர்ட்ரோசன், அல்பர்டா பீச் மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியாவின் பல பகுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து 19 துப்பாக்கிகள், பல தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நகல் ஆயுதங்கள், துப்பாகி ரவைகள், 2 குண்டு எதிர்ப்பு ஜாக்கெட்டுகள், 50,000 கடத்தல் சிகரெட்டுகள், 118,000 டொலர் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.