டொரோன்டோவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
டொரோன்டோவில் உள்ள நெடுஞ்சாலை 401-இல் காலை குப்பை ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றுடன் ஏற்பட்ட மோதலில் 59 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஒன்டாரியோ மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
காலை 7:52 மணியளவில் ஆலன் சாலைக்கு அருகிலுள்ள மேற்கு நோக்கிய விரைவு பாதைகளில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த டிரக்
குப்பை ஏற்றிச் சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி, நியூமார்க்கெட் நகரைச் சேர்ந்தவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டார்.
காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேறு எந்த காயங்களும் பதிவாகவில்லை.
இந்த விபத்தை கண்டவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.