பிராம்ப்டன் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கடந்த சனிக்கிழமை இரவு பிராம்ப்டனில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பீல் பகுதி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் இரவு 11 மணியளவில் கிரைஸ்லர் டிரைவ் மற்றும் கார்ப்பரேஷன் டிரைவ் சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போது, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒரு ஆண் சலனமற்ற நிலையில் கிடந்ததாகவும், அவருக்கு தீவிரமான தலைக்காயம் ஏற்பட்டிருந்தது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பீல் அவசர மருத்துவப் பணியாளர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் மற்றொரு வாகனமும் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனுடன் இருந்த டிரைவர், சம்பவ இடத்தை விட்டு விலகாமல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.