கிறிஸ்மஸ் தினத்தன்று பிரான்ஸில் கொடூரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகொலை
பிரான்ஸ் நாட்டின் மீக்ஸ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் நேற்று (25.12.2023) கிறிஸ்மஸ் தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஒருவரும் அவரது மகள்கள் இருவரும் கத்தியால் குத்தப்பட்டும், மகன்கள் இருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகரான பாரிசிற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீக்ஸ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட குழந்தைகள் 9 மாதம் முதல் 10 வயதினை உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, படுகொலை இடம்பெற்ற தினத்தன்று சந்தேகநபரான 33 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் கணவன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு சந்தேகநபர் உயிரிழந்த பெண்ணை கொலை செய்ய முயற்சித்த நிலையில் குறித்த பெண் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது.