வான் பரப்பில் பறக்கும் மர்ம பொருட்கள்: எலான் மஸ்க் பதிவிட்ட அதிர்ச்சி டுவீட்
அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக பறந்துகொண்டிருந்த மர்ம பலூன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க வான்பரப்பில் மர்ம பலூன்கள்/பொருட்கள் பறந்து வருவதும் அதை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இவ்வாறான நிலையில், இந்த சம்பவத்தை எலியன்களுடன் தொடர்புபடுத்தி டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் நகைச்சுவையாக டுவிட் செய்துள்ளார்.
இது தொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கவலைபடாதீர்கள், எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
Don’t worry, just some of my ? ? friends of mine stopping by …
— Elon Musk (@elonmusk) February 12, 2023