மாயமான ஆசிய பெண்: ஒன்ராறியோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு வழக்கு
பெரும் தொகை சம்பந்தப்பட்டுள்ள வழக்குகள், கைவிடப்பட்ட ஆடம்பரக் கார், திடீரென தொடர்புகள் துண்டிப்பு என மர்மங்கள் சூழ்ந்துள்ள ஒரு வழக்கு ரொரன்றோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், ரொரன்றோவில் வாழ்ந்துவந்த ஆசியப் பெண்மணி ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.
ஒன்ராறியோவில் சட்ட அலுவலகம் ஒன்றை நடத்திவந்தவர் இசபெல்லா (Isabella Dan, 53).
மூன்று வாரங்களாக இசபெல்லாவைக் காணவில்லை.
பொலிசார் இசபெல்லாவுக்கு ஏதேனும் மோசமான விடயம் நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். ஆகவே, இசபெல்லா காணாமல் போன வழக்கு, கொலை மற்றும் காணாமல் போனவர்கள் பிரிவு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Farrah Merali/CBC
இசபெல்லா பயன்படுத்திவந்த ஆடம்பரக் கார் அவர் வாழ்ந்துவந்ததாகக் கருதப்படும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அது வழக்கமாக பார்க் செய்யும் இடத்தில் இல்லாமல், தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இசபெல்லா, பெருந்தொகைக்கு தனது வீடு ஒன்றை விற்றுள்ளதும், பெருந்தொகை அடமானமாக பெற்றுள்ளதும், அவர் மாயமான நேரத்தில், அவர் பல வழக்குகளை எதிர்கொண்டதுமாக சேர்த்து பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
MISSING ADULT: Isabella Dan, 52 yrs old, 5’7”, female Asian, beige jacket, black pants, carrying red duffle bag. Friends are concerned for her well-being. Last seen in the area of Warden Ave. and Hwy 7. pic.twitter.com/CtpYmu1jrD
— York Regional Police (@YRP) March 9, 2023
இந்த விடயம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், இசபெல்லா குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Farrah Merali/CBC