கண்காட்சி கலந்து கொள்ளும் தேசிய பறவை.! தீவிர பயிற்சியில் உரிமையாளர்கள்
அபுதாபியில் நடக்கவுள்ள பறவைகள் கண்காட்சிக்காக அந்த நாட்டின் தேசிய பறவையை பழக்கப்படுத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பறவை பால்கன் ஆகும். அந்த நாட்டு மக்களின் வாழ்வோடு இணைந்தும் , கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் பால்கன் பறவை உள்ளது. இதற்கு தமிழில் வல்லூறு, ராஜாளி என்ற பெயர்களும் உண்டு.
இந்த பறவைகளை மனிதர்களாலும் விலங்குகளாலும் வேட்டையாட முடியாத முயல் ,எலி போன்றவற்றை வேட்டையாட பயன்படுத்துகின்றனர்.
இந்த பால்கன் பறவையானது மணிக்கு 400 முதல் 500 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும். இது இரையைப் பிடிக்கும் போது மின்னல் பாய்வது போன்று மணிக்கு 250 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
இந்த பால்கன் பறவையை முகமூடியை வைத்து மூடும் பொழுது அதன் கவனம் சிதறாமல் இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
இதை வெளியில் எடுத்துச் சொல்லும் போதோ அல்லது வேட்டையாட கொண்டு செல்லும்போதோ இதன் முகமூடியை அகற்றினால் அதன் கண்ணின் படும் முதல் பொருள் அதன் இலக்காக இருக்கும் என கூறுகின்றனர்.
பால்கன் பறவையை வேட்டைக்கு பழகுவதற்காக ஒரு சிறிய கயிற்றில் இறைச்சியை வைத்து அதை சுற்றிவிடும் போது அது வேகமாக பாய்ந்து சென்று பிடிக்கிறது.
மேலும் ரேடியோ அலைவரிசையில் மூலம் இயங்கும் சிறிய வகை விமானத்தின் உருவத்தை பறக்க விடும் பொழுது பால்கன் பறவையின் தோற்றத்தில் இரையாக நினைத்து அதனை துரத்திச் சென்று பிடிக்கும் என்பதற்காக இந்த முறையினை பயன்படுத்துகிறார்கள்.
இதனை தொடர்ந்து வரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அபுதாபியிலுள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச வேட்டை கண்காட்சியில் இந்த பால்கன் பறவைகள் கலந்து கொள்ள உள்ளது என அதன் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.