இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: சொந்த மக்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா
அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ், ஜோர்தான், போர்த்துகல் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
உலகில் பல நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரான் தொற்றானது தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன், பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ், போர்த்துகல், ஜோர்தான், தான்சானியா உள்ளிட்ட 83 நாடுகளில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை சுட்டிக்காட்டி அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களது கொரோனா பாதிப்பில்லை சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.