அசர்பைஜான் அதிகாரிகள் மீது தடை விதிக்குமாறு கோரிக்கை
அசர்பைஜான் அதிகாரிகள் மீது, கனடா தடைகள் விதிக்கப்பட வேண்டுமேன என்.டி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
என்.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹித்தர் பெக்பியர்சன் மற்றும் அலெக்சென்டரா பொலிரிஸ் ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலியிடம் ,இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஆர்மானியர்கள் மீது அசர்பைஜான் இராணுவத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பிராந்தியம் தொடர்பில் அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பிராந்திய மக்கள் மீது அசர்பைஜான் அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அசர்பைஜான் மீது கடுமையான தடைகளை அறிவிக்குமாறு லிபரல் அரசாங்கத்திடம், என்.டி.பி கட்சி கோரியுள்ளது.
அசர்பைஜான், இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் என்பனற்றில் உலகளாவிய ரீதியில் கனடா முன்னிலை வகிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.