கனடா புதிய ஜனநாயகக் கட்சிக்கு இடைக்கால தலைவராக டான் டேவிஸ் நியமனம்
கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) இற்கான இடைக்கால தலைவராக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பாராளுமன்ற உறுப்பினர் டான் டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தேசிய பேரவை திங்கட்கிழமையன்று கூடித் தீர்மானம் எடுத்தது.
முன்னாள் தலைவர் ஜக்மீத் சிங், ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் தன் சொந்த தொகுதியான மத்திய பர்னபியில் தோல்வியடைந்ததனை தொடர்ந்து தனது ராஜினாமாவை அறிவித்தார்.
பாராளுமன்றத்தின் முந்தைய அமர்வில் சுகாதாரத்துறை நிழல் அமைச்சராக இருந்த டான் டேவிஸ், நெடுஞ்சாலைகள் மற்றும் மருந்துப் பாதுகாப்புச் சட்டங்களை முன்னேற்றுவதற்காக லிபரல் அரசுடன் NDP நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
கட்சி தலைமை தொடர்பான நிலையைப் பற்றி ஆலோசிக்க NDP பாராளுமன்றக் குழு கடந்த வாரம் இருமுறை சந்தித்தது.
இந்த விவாதங்கள், தேசிய பேரவையின் திங்கட்கிழமை முடிவை உருவாக்க உதவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முந்தைய வாரம் நடைபெற்ற தேர்தலின் பின்னர் NDP பாராளுமன்றத்தில் வெறும் ஏழு ஆசனங்கள் மட்டுமே பெற்றதால், அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை இழந்தது.
புதிய தலைமைத் தேர்தலுக்கான விதிமுறைகள் மற்றும் நேரமென்பவை பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.