ஒன்றாரியோ சட்ட மன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட கட்சி உறுப்பினர்கள்
ஒன்றாரியோ மாகாண சட்ட மன்றிலிருந்து என்.டி.பி கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கல்விப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாது என்ற புதிய சட்ட ஏற்பாட்டை எதிர்த்து சட்ட மன்றில், என்.டி.பி குரல் கொடுத்தது.
அரசாங்கம் பொய்யுரைப்பதாக என்.டி.பி கட்சியின் தலைவர் பீட்டர் டபுன்ஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.
கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது எனவும் கல்விப் பணியாளர்களின் பேரம் பேசும் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் கட்சியின் தலைவர் டாபுன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ முதல்வர் அனைத்து மக்களையும் ஒரே விதமாக நாடாத்த வேண்டுமெனவும் அந்தக கொள்கையை அவர் பின்பற்றுவதில்லை எனவும் முதல்வர் டக் போர்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.