என்.டி.பி கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை
என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங், அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
சிறுவர்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் சிறுவர் வைத்தியசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களின் சுகாதார நலன் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதமொன்று நடாத்தப்பட வேண்டுமென ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் சிறுவர்களின் சுகாதாரம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
சிசுக்கள் மற்றும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் நோய்வாய்ப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமஷ்டி அரசாங்கம் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.