கனேடிய பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டணி கட்சி
கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு, கூட்டணி கட்சியான என்.டி.பி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பற்சுகாதாரம் குறித்த லிபரல் அரசாங்கத்தின் முதல் கட்ட நகர்வுகளில் நெகிழ்வுத்தன்மையை பின்பற்றுவதற்கு எவ்வித வாய்ப்பும் கிடையாது என என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.
பற்சுகாதாரம் குறித்த கட்சியின் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காப்புறுதி செய்து கொள்ளாத குறைந்த வருமானம் மற்றும் மத்திய வருமானம் ஈட்டுவோருக்கு பற்சுகாதார நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் இணங்கியுள்ளது.
[4RG0DA ]
இறுதியாக நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளத் தவறியிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் நிபந்தனை அடிப்படையில் என்.டி.பி கட்சி ஆதரவளிக்க இணங்கியது.
பற்சுகாதாரம் குறித்த முன்மொழிவுகளை லிபரல் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதனை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என என்.டி.பி கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆட்சி அமைக்கும் போது லிபரல் கட்சி வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென என்.டி.பி. கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.