நீர்கொழும்பு சிறைச்சாலை; மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவரும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக 27 உயிர்கள் பலியாகியுள்ளதுடன், அவர்களில் 7 பேர் சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஆவர். அத்துடன் காயமடைந்த சுமார் 100 பேரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் தற்போது பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், மோதலில் ஈடுபட்ட கைதிகள் சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.