நெல்சன் மண்டேலாவின் பேத்தி காலமானார்
புற்றுநோயுடன் போராடிவந்த நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா காலமானார்.
தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா தனது 43வது வயதில் உயிரிழந்துள்ளார்.
ஜோலேகா மண்டேலா தனது இடுப்பு, கல்லீரல், நுரையீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று (செப்.,26) அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த தகவலை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை உறுதி செய்தது. இது தொடர்பில் நெல்சன் மண்டேலா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில்,
ஜோலேகா மண்டேலாவின் மறைவுக்கு “மண்டேலா குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியது