நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் ; மேயர் வேட்பாளருக்கு ட்ரம்ப் கண்டனம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யவேண்டும் என நியூ யோர்க் மேயர் வேட்பாளர் மம்தானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை உள்ளது, ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று நியூயோர்க் மேயர் வேட்பாளர் மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தானியின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ட்ரம்ப், மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் யூத மக்களைப் பற்றி சில மோசமான விடயங்களைச் சொல்லியுள்ளார்.
மம்தானிக்கு வெள்ளை மாளிகை வழியாகதான் பணம் வருகிறது. அவருக்கு வெள்ளை மாளிகை வழியாக பணம் தேவை. அவர் இப்படி நடந்துகொள்வது அவருக்கு நல்லதல்ல.
இல்லையெனில் அவருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும்" என்று தெரிவித்தார்.