மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவை டயானாவுடன் தொடர்பு படுத்தி நெட்டினசன்கள் பதிவு!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு இன்று அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறுகிறது.
இந்நிலையில் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வின் போது மழைபெய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை இளவரசி டயனாவுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் வெளியாகிவருகின்றன.
வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் மன்னர் சார்ல்ஸ் முடிசூடவுள்ளார். இந்நிலையில் மதியத்தில் மழைபெய்யலாம் என வானிலை அவதானநிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மழைபெய்யலாம்
மழைபெய்யலாம் என குறிப்பிட்ட நேரத்திலேயே வெஸ்ட்மினிஸ்டர் அபேயிலிருந்து பக்கிங்காம் அரண்மணைக்கு சார்ல்ஸின் ஊர்வலம் செல்லவுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சமூக ஊடக பயனாளர்கள் இளவரசி டயனாவின் படங்களைவெளியிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இளவரசி டயனா 1997இல் விபத்தில் உயிரிழந்தார். மழைபெய்யலாம் என வெளியாகும் செய்திகளால் டயனா சிரிப்பது போன்ற படமொன்றை சமூக ஊடக பயனாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அதேசமயம் இன்னொரு நபர் மழைபெய்யலாம் என்ற செய்தியை பதிவிட்டு - அதன் கீழ் அதுநான்தான் என சார்ல்ஸிற்கு தெரியவேண்டும் என டயனா தெரிவிக்கின்றார் என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.
முடிசூடும் நிகழ்வின் போது மழை பெய்யலாம் என்ற செய்தியை பகிர்ந்துகொண்டுள்ள சமூக ஊடகபயனாளர்கள் இதன் பின்னணியில் டயனா இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இதனை டயனாவின் பழிவாங்கல் என டுவிட்டரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மன்னரின் முடிசூட்டு விழாவை இளவரசி டயனாவுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் வெளியான மீம்ஸ்கள் வைரலாகி கிவருகின்றன.