பாகிஸ்தானால் இந்தியாவிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து; அமெரிக்க உளவுத்துறை!
இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரி எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் (Scott Barrier) இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவர் 2019 புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது எனக் கூறியிருக்கிறார்.
மேலும் தனது ஆயுதங்களை கொண்டு ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கும் பாகிஸ்தான், அணு ஆயுதங்களை நவீனப்படுத்தவும் செய்யும், அதிகரிக்கவும் செய்யும் என உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.